உலக செய்திகள்

டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: டிரம்ப் + "||" + TikTok Deal Must Benefit US And Ensure "Total Security": Donald Trump

டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: டிரம்ப்

டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: டிரம்ப்
டிக் டாக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ‘பேஸ்புக்’-குக்கு பிறகு ‘டிக்-டாக்’ செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். சீனாவில் உருவாக்கப்பட்ட ‘டிக்-டாக்’ செயலியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்கா கூறிவருகிறது. 

சீனா, இந்த டிக்டாக் செயலி மூலம் உளவு பார்க்க முயற்சிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை எழுப்பி வருகிறது. எனினும், தங்கள் நிறுவன செயல்பாடுகளில் சீன அரசின் பங்கு எதுவும் இல்லை என்று டிக் டாக் நிறுவனம் தொடர்ந்து  கூறிவருகிறது.  

எனினும், இதை ஏற்க மறுத்த அமெரிக்கா,தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி   டிக் டாக் நிறுவனத்திற்கு தடை விதிக்க  அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. செப்டம்பர் மாத 15 -க்குள்  டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்தின் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிக்கும் நிறைவேற்று உத்தரவை டிரம்ப் பிறப்பித்துள்ளார். 

தடையை தவிர்க்கும் வகையில் டிக் டாக் நிறுவனம் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க நிறுவனத்துடன் விற்பனை செய்ய, டிக் டாக்  செய்து கொள்ளும் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு நீடித்த பலன் அளிக்கும் வகையிலும் முழு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்ப் - ஜோ பைடன் இடையே காரசார விவாதம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான டிரம்ப்-ஜோ பைடன் இடையே முதல் நேரடி விவாதம் நடந்தது. இருவரும் காரசாரமாக விவாதம் நடத்தினர்.
2. 15 கோடி விரைவான கொரோனா சோதனை கருவிகள் விநியோகிக்கும் திட்டம் டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க அரசு அடுத்த சில வாரங்களில் 15 கோடி விரைவான, கொரோனா வைரஸ் சோதனைக் கருவிகளை விநியோகிக்கும் என்று அறிவித்து உள்ளார்.
3. உலகளாவில் தடுப்பூசிக்கு முன் கொரோனாஇறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு
உலகளாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு முன் கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது..!
4. அமெரிக்காவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கும் முடிவு ஒரு வாரம் தள்ளிவைப்பு
அமெரிக்காவில் டிக் டாக்கிற்கு தடை விதிக்கும் முடிவு ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
5. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை
ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்து விடும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...