உலக செய்திகள்

நேபாளத்தில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 38 பேர் மாயம் + "||" + Landslide in Nepal: 5 killed; 38 people missing

நேபாளத்தில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 38 பேர் மாயம்

நேபாளத்தில் நிலச்சரிவு:  5 பேர் பலி; 38 பேர் மாயம்
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
காத்மண்டு,

நேபாளத்தில் பருவமழை பொழிய தொடங்கிய பின்னர் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட தொடங்கியது.  இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலை ஏற்பட்டது.

சாலைகள் முழுவதும் வெள்ளநீர் தேங்கி வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.  மற்றொரு புறம் கனமழையால் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன.  நேபாளத்தின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த சிந்துபால்சோக் நகரில் லிடிமோ லாமா டோல் மற்றும் ஜுகல் கிராம பகுதிகளில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அப்பகுதி உள்ளூர்வாசிகள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  இதில் நிலச்சரிவில் சிக்கி பலியான 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டன.  8 பேர் காயமடைந்து இருந்தனர்.  அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தவிர்த்து சம்பவ பகுதியை சேர்ந்த 38 பேரை காணவில்லை.  அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

நேபாளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் கடந்த ஜூலை இறுதியில் 113 பேர் பலியாகி இருந்தனர்.  67 பேர் காயமடைந்து இருந்தனர்.  38 பேரை காணவில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கிழக்கு ஆப்பிரிக்காவில் கடும் வெள்ளம், நிலச்சரிவு; 36 லட்சம் பேர் பாதிப்பு
கிழக்கு ஆப்பிரிக்காவில் கடந்த ஜூனில் இருந்து ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 36 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர்.
2. வியட்நாமில் கனமழை நிலச்சரிவில் ராணுவ முகாம் புதைந்து 22 பேர் பலி...?
வியட்நாமில் பெய்த கனழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்ததில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. நேபாளம்: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 -ஆக உயர்வு
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
4. கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 6 வது நாளாக மீட்பு பணி தொடர்கிறது.
5. கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
கேரளாவின் இடுக்கி மாவட்டம் ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக இன்று உயர்ந்து உள்ளது.