லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடி விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைன் 178 ஆக அதிகரிப்பு


லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடி விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைன் 178 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2020 11:16 PM GMT (Updated: 14 Aug 2020 11:16 PM GMT)

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது.

* லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது. மாயமான 30 பேரின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

* நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக 12 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நியூசிலாந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

* வடகொரியாவில் கொரோனா வைரஸ் அறிகுறியால் எல்லையோர நகரமான கேசோங் நகரில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

* ஓமன் நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கல்வி ஆண்டின் தொடக்கத்தை நவம்பர் 1-ந்தேதிக்கு ஒத்திவைக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

* மெக்சிகோவிலில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.


Next Story