கொரோனா பாதிப்பு; லத்தீன் அமெரிக்காவில் 2.5 லட்சம் பேர் பலி


கொரோனா பாதிப்பு; லத்தீன் அமெரிக்காவில் 2.5 லட்சம் பேர் பலி
x
தினத்தந்தி 21 Aug 2020 4:00 AM GMT (Updated: 21 Aug 2020 4:00 AM GMT)

கொரோனா பாதிப்புகளால் லத்தீன் அமெரிக்காவில் இதுவரை 2.5 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.

வாஷிங்டன்,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி, பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  இவற்றில் அமெரிக்கா அதிக அளவில் இலக்காகி இருக்கிறது.  அந்நாட்டில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து உள்ளதுடன் மற்ற நாடுகளை விட முன்னணியில் உள்ளது.  இதனை தொடர்ந்து பிரேசில் நாடு உள்ளது.

நாடுகள், தீவு கூட்டங்கள் மற்றும் பல பிரதேசங்களை உள்ளடக்கிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மற்றும் மிக பெரிய நாடாக பிரேசில் உள்ளது.  அந்நாட்டில், கடந்த 24 மணிநேரத்தில் 1,204 பேர் பலியாகி உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, பிரேசிலில் இதுவரை 1.12 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.  கடந்த வாரத்தில் பிரேசிலில் நாளொன்றுக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர்.  தொடர்ந்து பெரு, கொலம்பியா மற்றும் அர்ஜெண்டினா ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

கொரோனா பாதிப்புகளால் பிரேசில் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் இதுவரை 2.5 லட்சம் பேர் வரை பலியாகி உள்ளனர்.  இதனால் உலக அளவில் அதிக பாதிப்புகளை கொண்ட பகுதியாக லத்தீன் அமெரிக்கா உள்ளது.

Next Story