உக்ரைன் பயணிகள் விமானத்தை 25 விநாடிகள் இடைவெளியில் 2 ஏவுகணைகளால் தாக்கிய ஈரான்


உக்ரைன் பயணிகள் விமானத்தை 25 விநாடிகள் இடைவெளியில் 2 ஏவுகணைகளால் தாக்கிய ஈரான்
x
தினத்தந்தி 24 Aug 2020 5:03 AM GMT (Updated: 24 Aug 2020 5:03 AM GMT)

உக்ரைன் பயணிகள் விமானத்தை 25 விநாடிகள் இடைவெளியில் இரு ஏவுகணைகளால் ஈரான் தாக்கியது தெரியவந்துள்ளது.


துபாய்

அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஜனவரி மாதம் தங்கள் வான் எல்லையில் பறந்த உக்ரைன் பயணிகள் விமானத்தை ஈரான் தவறுதலாகச் சுட்டு வீழ்த்தியது. இந்த நிகழ்வில் விமானத்தில் இருந்த 176 பேரும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் ஈரானின் சிவில் ஏவியேஷன் அமைப்பின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில், முதல் ஏவுகணை விமானத்தைத் தாக்கிய பின்னரும் பல பயணிகள் உயிருடன் இருந்தது தெரியவந்துள்ளது.

ஆனால் எச்சரிக்கை கிடைக்கும் முன்னர் அடுத்த 25வது நொடிக்குள் 2வது ஏவுகணை தாக்கியதால் விமானம் விழுந்து நொறுங்கியதாகத் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஈரானிய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.


Next Story