உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 24 Aug 2020 9:00 PM GMT (Updated: 24 Aug 2020 7:35 PM GMT)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன்,

உலகைச் சுற்றி...

* அமெரிக்க ஜனாதிபதியின் மாளிகையான வெள்ளை மாளிகையில் டிரம்பின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவராக இருந்து வரும் கெல்லியன்னே கான்வே, தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் இந்த மாத இறுதியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் பிரசார குழுவின் மேலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே நேற்றுடன் 2,799 நாட்கள் தொடர்ந்து பதவியில் இருந்து ஜப்பானில் மிக நீண்டகாலம் பணியாற்றிய தலைவர் என்கிற சாதனையை படைத்துள்ளார். ஷின்ஜோ அபேயின் உடல் நலம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வரும் சூழலில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில் டிரம்பின் மத்திய கிழக்கு திட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக அமெரிக்க வெளியுறவு மந்திரி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் கடந்த சில வாரங்களாக பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயில் சுமார் 10 லட்சம் ஏக்கர் வனப்பரப்பு நாசமாகியுள்ளது. நேற்று முன்தினம் இந்த காட்டுத்தீயில் சிக்கி 70 வயது முதியவர் ஒருவர் பலியானார்.

* அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன், தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் அமெரிக்காவில் 4 லட்சம் அமெரிக்க டாலருக்கு மேல் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.3 கோடி) வருவாய் ஈட்டும் தனிநபரின் வரியை உயர்த்துவேன் என தெரிவித்துள்ளார்.

* மாலியில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள கிளர்ச்சி ராணுவ அமைப்பு 2023-ம் ஆண்டு வரை நாட்டில் தேர்தலை நடத்தக் கூடாது எனவும் அதுவரை ராணுவ ஆட்சியை இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Next Story