ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நல குறைவால் ராஜினாமா


ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நல குறைவால் ராஜினாமா
x
தினத்தந்தி 28 Aug 2020 8:59 AM GMT (Updated: 28 Aug 2020 8:59 AM GMT)

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நல குறைவால் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமராக இருந்த பெருமையை பெற்றவர் ஷின்சோ அபே.  அவரது பதவி காலம் வரும் 2021ம் ஆண்டு செப்டம்பர் உடன் முடிவடைகிறது.

சமீப காலங்களாக அவரது உடல்நிலை குறித்து ஊகங்கள் பரவி வருகின்றன.  கடந்த கோடை காலத்தில் அவரது உடல்நிலையில் பாதிப்பு தெரிய தொடங்கியது.  எனினும், இந்த மாதம் 
உடல்நிலை மோசமடைந்துள்ளது.  ஒரு குறிப்பிடப்படாத ஆரோக்கிய பாதிப்புக்காக மருத்துவ பரிசோதனைகளுக்காக, மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.  பின்னர் சமீபத்திய நாட்களில் காய்ச்சல் அதிகரித்து உள்ளது என கூறப்படுகிறது.

ஷின்சோ உடல் நலப்பிரச்சினைகள் தொடர்பாக தனது ராஜினாமாவை வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்க உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து இருந்தன.

அபே தனது நோய் மோசமடைந்துள்ளதால் நாட்டை வழிநடத்துவதில் அது சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர் கவலைப்படுகிறார்.  அதனால் ராஜினாமா செய்ய விரும்புகிறார் என உள்ளூர் ஊடகம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றது.  வரும் 2021 செப்டம்பர் வரை அவரது பதவி காலம் உள்ள நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுத்து அதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறும் வரை அவர் பதவியில் நீடிக்க கூடும் என கூறப்படுகிறது.

Next Story