உலக செய்திகள்

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மலேசியா வருவதற்கு டிச.31 ஆ,ம் தேதி வரை தடை + "||" + Malaysia’s recovery movement control order extended to Dec 31, tourists still not allowed in: PM Muhyiddin

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மலேசியா வருவதற்கு டிச.31 ஆ,ம் தேதி வரை தடை

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள்  மலேசியா வருவதற்கு டிச.31 ஆ,ம்  தேதி வரை தடை
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மலேசியா வருவதற்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர்,

மலேசியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மலேசிய மக்களுக்கு  தொலைக்காட்சியில் உரையாற்றிய  பிரதமா் முஹைதீன் யாசின்  கட்டுப்பாடுகள் குறித்து கூறியதாவது: “:உலகின் பிற நாடுகளில்  கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மலேசியாவில் நிலைமை கட்டுக்குள் இருந்தாலும், அவ்வப்போது சில இடங்களில் அந்த நோய்த்தொற்று பரவல் தலையெடுத்து வருகிறது.

இந்த நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் வகையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலேசியா வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை இந்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்படுகிறது.மேலும், ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ள மற்ற கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்படுகின்றன.” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையில் கொரோனா பாதிப்பு உயர்வு- பல இடங்களில் ஊரடங்கு அமல்
இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
2. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 89.20 சதவீதமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 89.20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
3. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.14 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.08 கோடியாக உயர்ந்துள்ளது.
4. மராட்டியத்தில் மேலும் 8,142 பேருக்கு கொரோனா தொற்று- சுகாதாரத்துறை தகவல்
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 180- பேர் உயிரிழந்தனர்.
5. இந்தியாவில் 3 மாதங்களுக்குப் பின் 50 ஆயிரத்திற்கு கீழ் வந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு
கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல், அதிரடியாக குறையத்தொடங்கி இருப்பது நாட்டு மக்கள் அத்தனைபேரையும் நிம்மதிப்பெருமூச்சு விட வைத்துள்ளது.