உலக செய்திகள்

பிரேசிலில் உள்ள தீவுக்கு கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மட்டுமே செல்ல அனுமதி ! + "||" + Brazilian island set to reopen, but only for tourists who have already had Covid-19

பிரேசிலில் உள்ள தீவுக்கு கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மட்டுமே செல்ல அனுமதி !

பிரேசிலில் உள்ள தீவுக்கு கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மட்டுமே செல்ல அனுமதி !
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடுடன் பிரேசிலில் ஒரு தீவு ஒன்றுக்கு மக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரியோ டி ஜெனிரோ,

உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில்  அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது.  பிரேசிலில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டியுள்ளது.  கொரோனா தொற்று காரணமாக பிரேசில் நாட்டு எல்லைகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன.  தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு தீவு ஒன்றையும் பிரேசில் அடுத்த வாரம் திறக்க உள்ளது.

பெர்னண்டோ டி நோரோன்ஹா என்ற தீவு மிக அழகிய இடங்களை கொண்டுள்ளது. 21-க்கும் மேற்பட்ட எரிமலைகளும் அந்த தீவில் உள்ளன. 5 மாதங்களுக்குப் பிறகு  இந்த தீவை திறப்பதாக பிரேசில் அரசு அறிவித்தது. ஆனால்,  ஆனால் விநோதமான ஒரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களுக்கு மட்டுமே இந்த தீவில் நுழைய அனுமதி உண்டு. சுற்றுலா பயணிகள் கொரோனாவில் இருந்து மீண்டு வந்ததற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும். அது சுமார் 20 நாட்களுக்கு முன்பு பெற்றதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களது உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆண்டிபாடிகள் இருப்பதை உறுதி செய்யும் வகையிலான சோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அரசின் இந்த முடிவுக்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. பிரேசிலில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேர் பலி
பிரேசிலில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 858 பேர் உயிரிழந்துள்ளனர்.
2. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை
ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்து விடும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.03 - கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.03 கோடியாக உயர்ந்துள்ளது.
4. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ரூ.7,168 கோடி செலவு- சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
“கொரோனா பரவலை கட்டுப் படுத்த தமிழகத்தில் ரூ.7,168 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது” என சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
5. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைகிறது-சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தகவல்
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வருவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.