உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.53-கோடியாக உயர்வு


உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.53-கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 31 Aug 2020 1:04 AM GMT (Updated: 31 Aug 2020 1:04 AM GMT)

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.53- கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா,

சீனாவில் ஹூபேய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்- பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.53 -கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8.50-லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.77- கோடியாக உயர்ந்துள்ளது.


Next Story