கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழையத் தடை + "||" + Malaysia bans Indians from entering the country due to growing number of COVID-19 infections
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழையத் தடை
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோலாலம்பூர்
இந்தியாவில் கொரோனா தொற்று நோய் அதிகரிப்பு விகிதம் காரணமாக மலேசியா அரசு நேற்று முதல் இந்தியர்கள் மலேசியாவிற்குள் நுழைவதற்கு தடை விதித்து உள்ளது.இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் குடிமக்களுக்கும் இந்த தடை பொருந்தும்.
நீண்ட கால தேர்ச்சி பெற்றவர்கள், மாணவர்கள், வெளிநாட்டவர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் மலேசியர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த முடிவால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் மார்ச் முதல் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் "உலகம் முழுவதும் இன்னும் தீவிரமாக பரவி வருவதால், இந்த ஆண்டு இறுதி வரை தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மலேசியா நடவடிக்கை எடுத்து உள்ளது என்று பிரதமர் முஹைதீன் யாசின் கூறி உள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்று ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்தார்.