உலக செய்திகள்

ஈரான் பாதுகாப்பு மந்திரி பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை சந்திக்கிறார் ராஜ்நாத் சிங் + "||" + Rajnath Singh to meet Iranian defence minister after 3-day Russia visit

ஈரான் பாதுகாப்பு மந்திரி பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்

ஈரான் பாதுகாப்பு மந்திரி பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்
ஈரான் பாதுகாப்பு மந்திரி பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை ராஜ்நாத் சிங் சந்தித்து பேச உள்ளார்.
டெஹ்ரான்,

மத்திய பாதுகாப்பு துறை மந்திரி  ராஜ்நாத் சிங்  மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றார். மாநாட்டில் சீன, ரஷ்ய, மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சீன பாதுகாப்பு மந்திரியுடன் பேசிய ராஜ்நாத் சிங்,


எல்லையில் மிக விரைவில் பதற்றத்தை தணிப்பது மற்றும் படைகளை முழுவதுமாக விலக்குவது தொடர்பாக, ராணுவம் மற்றும் தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தையை இரு தரப்பினரும் தொடர வேண்டும். இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட ஒருமித்த முடிவின்படி இருதரப்பும் அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு வழிகாட்ட வேண்டும்.

லடாக் எல்லையில் பங்கோங்சோ ஏரி உள்ளிட்ட மோதல் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து விரைவில் படைகளை முற்றிலுமாக வாபஸ் பெற வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியாவுடன் சீனா ஒத்துழைக்க வேண்டும்.

எல்லை மேலாண்மையில் இந்திய படைகள் எப்போதும் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துகொள்கின்றன. அதேநேரம் இந்திய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கான எங்கள் உறுதியில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா தன் இறையாண்மையை விட்டுக்கொடுக்காது என்று கண்டிப்புடன் கூறினார்.

இந்நிலையில்  ஷாங்காய் மாநாட்டில் கலந்து கொண்டு ஈரான் வந்துள்ள ராஜ்நாத் சிங் ஈரான் பாதுகாப்பு மந்திரி பிரிகாடியர் ஜெனரல் அமீர் ஹடாமியை சந்தித்து பேச உள்ளார். சந்திப்பின் போது இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பெர்சியன் வளைகுடா நாடுகள் நிலைமை குறித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஈரானில் மேற்கொள்ளப்படும் இந்திய திட்டங்களை வேகப்படுத்தவும், ஈரானில் அதிகரிக்கும் சீன முதலீடுகள் குறித்தும் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது; ராஜ்நாத் சிங்
தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
2. இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட யாரும் அபகரிக்க விட மாட்டோம் - ராஜ்நாத் சிங்
இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட, யாரும் அபகரிக்க விட மாட்டோம் என்று பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
3. இந்தியா எப்போதும் அண்டை நாடுகளுடன் நட்பு உறவையே தொடரவே விரும்புகிறது - ராஜ்நாத் சிங்
இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடன் நட்பு உறவையே தொடரவே விரும்புகிறது என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
4. தசரா பண்டிகையையொட்டி ராஜ்நாத் சிங் சிக்கிம் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வரும் 23-24 தேதிகளில் சிக்கிம் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. கலாம் தனது முழு வாழ்க்கையையும் நாட்டிற்காக அர்ப்பணித்தார் - ராஜ்நாத் சிங் புகழாரம்: மக்கள் ஜனாதிபதியாக நினைவில் நிற்கிறார் என ஜே.பி. நட்டா பெருமிதம்
மக்கள் ஜனாதிபதி கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,என அனைத்து தரப்பினரும் அவரின் நினைவுகனை பகிர்ந்து அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.