உலக செய்திகள்

நவால்னி விவகாரம்: ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடி அளிக்கும் ஜெர்மனி + "||" + Germany raises pressure on Russia in Navalny poisoning probe

நவால்னி விவகாரம்: ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடி அளிக்கும் ஜெர்மனி

நவால்னி விவகாரம்: ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடி அளிக்கும் ஜெர்மனி
நவால்னி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஜெர்மனி தெரிவித்துள்ளது.
பெர்லின்,

ரஷிய அதிபா்  புதினின் ஆட்சிக்கு எதிராக தீவிரமாகப் போராடி  வருபவர் அலெக்ஸி நவால்னி. முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான நவால்னி இதற்காக பல முறை சிறை சென்றுள்ளாா். புதினுக்கு எதிராக கடுமையாக போராடும்  நவால்னிக்கு அச்சுறுத்தல்களும் அதிகமாக உள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு நவால்னி மீது அரசு ஆதரவாளர்கள் நச்சு தாக்குதல் நடத்தியதில் அவரது ஒரு கண் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், செர்பியா பிராந்தியத்தின் டோம்ஸ்க் நகரிலிருந்து விமானம் மூலம் அலெக்ஸி நவால்னி கடந்த மாதம் 13-ஆம் தேதி மாஸ்கோ வந்துகொண்டிருந்தாா். விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென அவா் சுயநினைவு இழந்தாா். அதையடுத்து, அவா் சென்றுகொண்டிருந்த விமானம் ஓம்ஸ்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி தலைநகா் பொலினிலுள்ள மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கோமா நிலையில், உயிருக்குப் போராடி வருகிறாா். 

நவால்னியின் உடலில் ரஷிய ராணுவம் ரசாயன ஆயுதமாக உருவாக்கிய 'நோவிசோக்' என்ற நச்சுப் பொருள் கலந்திருப்பதாக ஜர்மனி தெரிவித்தது. இதுதொடா்பாக விசாரணை நடத்தவும் அந்த நாடு முடிவு செய்துள்ளது. டோம்ஸ் நகரிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக, விமான நிலையித்திலுள்ள ஒரு விற்பனையகத்தில் நவால்னி தேநீா் அருந்தினாா். அந்தத் தேநீரில் வேண்டுமென்றே விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், நவால்னி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ரஷ்யா ஒத்துழைப்பு அளிக்காவிட்டால்  அந்த நாட்டுடன் மேற்கொண்டுள்ள 'நாா்ட் ஸ்ட்ரீம் 2' கடலடி குழாய் திட்டத்தை நாங்கள் கைவிட வேண்டியிருக்கும்.அந்த திட்டம் தொடா்பான எங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் நிலைக்கு ரஷியா எங்களைக் கொண்டு செல்லாது என்று நம்புகிறோம் என ஜெர்மனி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அலெக்சி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை பிரான்ஸ், சுவீடன் நாடுகள் உறுதி செய்தன-ஜெர்மனி தகவல்
அலெக்சி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை பிரான்ஸ், சுவீடன் நாடுகள் உறுதி செய்ததாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
2. ஜெர்மனியில் உள்ள அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற டிரம்ப் முடிவு
ஜெர்மனியில் உள்ள 9 ஆயிரம் அமெரிக்க படை வீரர்களை திரும்பப்பெற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவு எடுத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
3. ஜெர்மனியின் பிரீமியர் லீக் கால்பந்து வீரர்கள் 6 பேருக்கு கொரோனா
ஜெர்மனியின் பிரீமியர் லீக் கால்பந்து வீரர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. ஜெர்மனியில் ஊரடங்கை தளர்த்திய பிறகு கொரோனா பரவல் அதிகரிப்பு
ஜெர்மனியில் ஊரடங்கை தளர்த்திய பிறகு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
5. ஜெர்மனியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,61,985 ஆக அதிகரிப்பு
ஜெர்மனியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,61,985 ஆக அதிகரித்துள்ளது.