ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
x
தினத்தந்தி 7 Sep 2020 10:45 PM GMT (Updated: 7 Sep 2020 10:45 PM GMT)

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இபராகி பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.


* ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் உள்ள இபராகி பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நேற்று முன்தினம் மாலை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 27 வயதான வாலிபரை நேற்று இங்கிலாந்து போலீசார் கைது செய்தனர்.

* கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவின் மாபலே நகரில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

* சீனாவில் அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கான அடையாள அட்டையை புதுப்பிப்பதை சீனா வேண்டுமென்றே தாமதித்து வருவதாகவும், அமெரிக்க பத்திரிகையாளர்களை நாடு கடத்தும் நோக்கில் இதனை செய்வதாகவும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

* தென்கொரியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக வீசி வருகிறது. அங்கு தொடர்ந்து 5 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 200-க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இதன் மூலம் அந்த நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்து 296 ஆக அதிகரித்துள்ளது.

* ஜப்பானில் ஹைசென் புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலில் சிக்கி 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு லட்சக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.


Next Story