இங்கிலாந்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.3 ஆக பதிவு


இங்கிலாந்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.3 ஆக பதிவு
x
தினத்தந்தி 8 Sep 2020 11:04 AM GMT (Updated: 8 Sep 2020 11:04 AM GMT)

இங்கிலாந்து நாட்டின் தென்பகுதியில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் தென்பகுதியில் பெட்போர்டுஷைர் நகரில் லெய்டன் பசார்டு என்ற இடத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இந்நிலநடுக்கம் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  இது ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது.  இதனால் வெடிகுண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டுள்ளது.

இந்நிலடுக்கத்தினால், அந்த பகுதியில் இருந்த பல வீடுகள் அதிர்ந்துள்ளன.  வீடுகளின் கதவுகள் ஆடியுள்ளன.  சுவரில் பொருத்தப்பட்டிருந்த டி.வி. உள்ளிட்ட பொருட்கள் குலுங்கின.  5 வினாடிகள் வரை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இதனால் பொதுமக்கள் பலர் அச்சமடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து பலர் போலீசாரை தொடர்பு கொண்டுள்ளனர்.  எனினும், இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கட்டிடங்களுக்கு பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Next Story