உலக செய்திகள்

கனடாவில் பரபரப்பு; முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து + "||" + Excitement in Canada; Flight canceled by child not wearing face shield

கனடாவில் பரபரப்பு; முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து

கனடாவில் பரபரப்பு; முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து
கனடாவில் முக கவசம் அணியாத குழந்தையால் விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
டொராண்டோ,

கனடாவில் கல்கரி நகரத்தில் இருந்து டொராண்டோ நகருக்கு வெஸ்ட்ஜெட் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் சப்வான் சவுத்ரி என்ற பயணி தனது மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் ஏறி இருந்தார். ஆனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அனைத்து பயணிகளும் தர்ம சங்கடத்துக்கு ஆளாகினர்.

இதற்கு காரணம், தனது இளைய குழந்தை (19 மாத பெண் குழந்தை) முக கவசம் அணிந்தே ஆக வேண்டும் என்று விமான நிறுவனம் கட்டாயப்படுத்துவதுதான் என்று சவுத்ரி கூறினார். மேலும், விமானம் புறப்படுவதற்கு முன் தனது 3 வயது மகள் முக கவசம் அணியாமல், தின்பண்டம் சாப்பிட்டு கொண்டிருந்ததாகவும், குழந்தை சாப்பிட்டு முடிப்பதை கூட சகித்துக்கொள்ளாமல் விமான சிப்பந்திகள், குழந்தை முக கவசம் அணியாவிட்டால், விமானத்தின் கதவுகளை மூட முடியாது என மறுத்து விட்டதாகவும் கூறினார்.

அதைத் தொடர்ந்து சவுத்ரியும் குழந்தைக்கு முக கவசம் அணிவிக்க சம்மதித்தார். அவரது 3 வயது மகள் முக கவசம் அணிந்து விட்டாள். ஆனால் 19 மாத குழந்தைதான் அணியவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே நடந்த நிகழ்வுகளை பார்த்த அந்த குழந்தை வாந்தியெடுத்தது. இதில் ஆத்திரம் அடைந்த விமான சிப்பந்திகள், தீவிரமாயினர். அந்த குடும்பத்தினரை விமானத்தை விட்டு வெளியேறுமாறு கூறினர். அப்படி அவர்கள் வெளியேறாவிட்டால் கைது, வழக்கு, தண்டனை என நடவடிக்கை நீளும் என எச்சரித்ததுடன், போலீசாரையும் வரவழைத்தனர். அதைத் தொடர்ந்து தாங்கள் மரியாதைக்குரியவர்கள் என்று கூறி சவுத்ரி குடும்பத்தினர் வெளியேற சம்மதித்தனர்.

ஆனால் விமான சிப்பந்திகளோ விமானத்தை இயக்கும் மன நிலையில் இல்லை என கூறி விட்டனர். இதற்கிடையே போலீசார் வந்து விமானத்திற்குள் இருந்த அனைத்து பயணிகளையும் வெளியேற்றினர். விமான சேவையும் ரத்தானது. இருப்பினும் கனடாவில் கொரோனா கட்டுப்பாட்டு விதியின்படி 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முக கவசம் அணிந்தால் போதும் என தெரிய வந்துள்ளதாக சவுத்ரி தெரிவித்தார். ஆனால் விமான நிறுவனமோ, 3 வயது குழந்தை முக கவசம் அணியாமல் இருந்ததுதான் பிரச்சினைக்கு வழிவகுத்தது என கூறியது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசுதிருவிழா கொடியேற்றம் சப்பர வீதி உலா, தேரோட்டம் ரத்து
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசுதிருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சப்பர வீதி உலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் ரத்து 22-ந்தேதி நேரில் வழங்கப்படுகிறது
கொரோனா காரணமாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெற இருந்த திருப்பதி திருக்குடை ஊர்வலம் ரத்து செய்யப்படுவதாகவும், திருக்குடைகளை 22-ந்தேதி நேரில் வழங்க இருப்பதாகவும் கோபால்ஜி தெரிவித்துள்ளார்.
3. முக கவசம் அணியாதவர்களுக்கு பயண தடை; விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு
முக கவசம் அணியாத பயணிகளை பயண தடை பட்டியலில் வைக்கும்படி விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து பொது இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
4. இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்வது குறித்த வழக்கு: தேர்வுகளை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்வது குறித்த வழக்கில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
5. இன்று விநாயகர் சதுர்த்தி விழா: மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு மெகா கொழுக்கட்டை படையல் ரத்து
விநாயகர் சதுர்த்தியான இன்று(சனிக்கிழமை) மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாருக்கு மெகா கொழுக்கட்டை படையல் ரத்து செய்யப்பட்டுள்ளது.