ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலி


ஆப்கானிஸ்தானில் நடந்த துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலி
x
தினத்தந்தி 11 Sep 2020 2:55 PM GMT (Updated: 11 Sep 2020 2:55 PM GMT)

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும் அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்புப் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டதாக அம்மாகாண காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், வியாழக்கிழமை இரவு கலந்தர் மாவட்டத்தில் உள்ள காவல்துறையின் சோதனைச் சாவடிகளை  தலிபான்கள் தாக்கினார்கள். இதையடுத்து ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய பதில் தாக்குதலில் 10 தலிபான்கள் கொல்லப்பட்டனர். இதேபோல், சபரி மாவட்டத்தில் ஒரு தலிபான் மறைவிடத்தை குறிவைத்து போர் விமானம் தாக்கியதில் 12 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில் ஆப்கான் படைகளில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து எந்த செய்தியும் தெரிவிக்காமல், தலிபான்கள் ஆக்கிரமிப்பு இடங்களை கைப்பற்றும் வரை ஆப்கான் படையின் ஒடுக்குமுறை தொடரும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தலிபான் அமைப்பு இன்னும் எந்தவொரு கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை

Next Story