உலக செய்திகள்

நேபாளம்: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 -ஆக உயர்வு + "||" + 12 Killed Due To Landslides In Nepal, At Least 21 Missing

நேபாளம்: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 12 -ஆக உயர்வு

நேபாளம்: நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை  12 -ஆக உயர்வு
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
காத்மாண்டு,
 
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளத்தின் திபெத் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர் மழையால் பாராபைஸ் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 21-பேரை காணவில்லை.  மாயமானவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.  

நேபாளத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களில் சிக்கி 314- பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவுகளில் சிக்கிய 111-பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. 160- பேர் காயம் அடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. வியட்நாமில் கனமழை நிலச்சரிவில் ராணுவ முகாம் புதைந்து 22 பேர் பலி...?
வியட்நாமில் பெய்த கனழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்ததில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. நேபாளத்தில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 38 பேர் மாயம்
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
3. கேரள நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 6 வது நாளாக மீட்பு பணி தொடர்கிறது.
4. கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
கேரளாவின் இடுக்கி மாவட்டம் ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக இன்று உயர்ந்து உள்ளது.
5. நிலச்சரிவு, விமான விபத்து: தீவிரமாக செயல்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினருக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி - பினராயி விஜயன்
கேரளத்தில் வெள்ள பாதிப்பு, விமான விபத்து, பணிகளை மேற்கொள்வதற்காக தகுந்த நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினரை அனுப்பியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.