பாகிஸ்தானில் பருவ மழையால் 300 பேர் பலி


பாகிஸ்தானில் பருவ மழையால் 300 பேர் பலி
x
தினத்தந்தி 13 Sep 2020 11:32 PM GMT (Updated: 13 Sep 2020 11:32 PM GMT)

பாகிஸ்தான் அரசு கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில் பருவமழையும் அங்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பருவமழை காலமாக உள்ளது. இந்தப் பருவமழை காலத்தில் வெள்ளம் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் நூற்றுக்கணக்கான உயிரிழப்பும், பல கோடி ரூபாய் மதிப்புக்கு பொருட்சேதமும் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இவற்றை சமாளிக்க பாகிஸ்தான் அரசு ஒவ்வொரு ஆண்டும் போராடி வருகிறது.

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசு கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில் பருவமழையும் அங்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் கடந்த ஜூன் மாத இறுதியிலிருந்து பெய்து வரும் பருவ மழையால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.


Next Story