கொரோனா அதிகரிப்பு: இங்கிலாந்தில் 6 பேர் மட்டுமே ஒன்றாக கூட அனுமதி; புதிய ஆறு விதிகள்


கொரோனா அதிகரிப்பு: இங்கிலாந்தில் 6 பேர் மட்டுமே ஒன்றாக கூட அனுமதி; புதிய ஆறு விதிகள்
x
தினத்தந்தி 14 Sep 2020 7:28 AM GMT (Updated: 14 Sep 2020 8:04 AM GMT)

இங்கிலாந்தில் நாளை முதல் ஆறு விதி என்று புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதால், இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

லண்டன்

இங்கிலாந்தில்  நாளை முதல் ஆறு விதி என்று புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதால், இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதை மக்கள் சரியாக பின்பற்றாவிட்டால் நாடு மீண்டும் ஒரு கடினமான முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாதில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கூட 3000-க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இப்படியே சென்றால், இது மிகவும் ஆபத்து என்பதால், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் படி நாளை முதல் ஆறு முக்கிய விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதாவது, திருமணம் மற்றும் இறுதி ஊர்வலத்தின் போது 30 பேருக்கு அனுமதி, பப்புகளில் ஒன்றாக 6 பேர் மட்டுமே, பார்க்குகளிலும் அதே போன்று 6 பேர் மட்டுமே ஒன்றாக கூட அனுமதி.அதே சமயம் வீடுகளில் 8 பேருக்கு மேல், வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூடக் கூடாது, பொதுவெளியில் வெகுஜன் மக்கள் கூடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த 6 விதிகள் பெரிய குடும்பங்களுக்கு ஒரு சில விலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைப் பற்றி இன்னும் முழு விபரம் வெளியாகவில்லை. வேலைகளின் போது 6-க்கும் மேற்பட்டோர், பள்ளிகளில் கல்வி நோக்களுக்காக 6-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்படுவர்.

அதே போன்று வழிபாட்டு தலங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டின் உள்ளே மற்றும் வெளியே சந்திக்க அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இங்கிலாந்து முழுவதிலும் மாறுபடும்.

ஸ்காட்லாந்தில் மூன்று வெவ்வேறு வீடுகளில் இருந்து எட்டு பேர் வரை கூடலாம். வடக்கு அயர்லாந்தில் இரண்டு வீடுகளைச் சேர்ந்த ஆறு பேர் வரை என்று கூறப்பட்டுள்ளது.இந்த புதிய விதிகள் நாளை முதல் தனியார் வீடுகள், பூங்காக்கள், விடுதிகள் மற்றும் உணவகங்களில் கூடிய கூட்டங்களுக்கு அமலுக்கு வரும். இந்த விதிகள் குறைந்தது மூன்று மாதங்களாவது இருக்கும் என்று நம்ப்பப்படுகிறது.

மேலும், இந்த விதிகள் எதிர் வரும் காலம் வரை இருக்கும். அதாவது கிறிஸ்துமஸிற்கு முன்பு இதை நாங்கள் திரும்ப பெற முடியும் என்று நம்புவதாக சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு மாநில செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.

நாளை முதல் அமுலுக்கு வரும் இந்த விதிமுறைகளை மீறினால் முதலில் 100 பவுண்ட் அபராதம், அதன் பின் அதன் தொடர்ச்சியாக அபராதம் செலுத்த நேர்ந்தால், அது 3,200 பவுண்ட் வரை செலுத்த நேரிடும்.

ஒரு சிலருக்கு இந்த 6 பேர் கூடுவதில், குழந்தைகளும் உள்ளடங்குவார்களா என்ற சந்தேகம் இருக்கலாம், இது குழந்தைகளையும் உள்ளடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெற்றோர்களுடன் ஐந்து பேர் கொண்ட வீடு இருந்தால், அவர்கள் வேறு ஒரு நபரை மட்டுமே சந்திக்க முடியும்.

மொத்த எண்ணிக்கை ஆறு பேரைத் தாண்டினால் குடும்பக் கூட்டங்கள் நடத்த முடியாது. அப்படி நடத்தினால் மீறினால் அபராதம்.பப்கள், உணவகங்கள் மற்றும் கபேக்கள் உள்ளிட்ட சமூக வளாகங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து சோதனை மற்றும் தகவல்களைக் கோரவும், அந்த விவரங்களை 21 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும்.

ஏனெனில், வைரஸின் பரவல் அதிகமாகினால், பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புடைய நபர்களை கண்டுபிடிக்க இது உதவும் என்று நம்பப்படுகிறது.

Next Story