உலக செய்திகள்

ரஷ்யாவில் மேலும் 5,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Russia records 5,509 new Covid-19 cases in 24 hours, tally at 1,068,320

ரஷ்யாவில் மேலும் 5,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ரஷ்யாவில் மேலும் 5,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்யாவில் இன்று மேலும் 5,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாஸ்கோ, 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 2,92,19,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 9,29,086 பேர் உயிரிழந்துள்ளனர். உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டிலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 10,68,320 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 57 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 18,635 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,475 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 8,78,700 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,70,985 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா நான்காவது இடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும் (67,10,588 பேர்), இரண்டாம் இடத்தில் இந்தியாவும் (48,50,887 பேர்), மூன்றாவது இடத்தில் பிரேசிலும் (43,30,455 பேர்) உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று மேலும் 2,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 2,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் இன்று மேலும் 5,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 5,938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கர்நாடகாவில் இன்று மேலும் 5,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 5,985 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் மேலும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 97 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் மேலும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ரஷ்யாவில் மேலும் 5,475 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ரஷ்யாவில் இன்று மேலும் 5,475 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.