அமெரிக்காவில் டிக் டாக் செயலியை தொடர ஆரக்கிள் நிறுவனத்துடன் பைட் டான்ஸ் கைகோர்ப்பு


அமெரிக்காவில் டிக் டாக் செயலியை தொடர ஆரக்கிள் நிறுவனத்துடன் பைட் டான்ஸ் கைகோர்ப்பு
x
தினத்தந்தி 15 Sep 2020 12:26 AM GMT (Updated: 15 Sep 2020 12:54 AM GMT)

டிக்-டாக் செயலியை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தோல்வி அடைந்து விட்டது.

வாஷிங்டன்,

 செப்டம்பர் 15-ந் தேதிக்குள் பைட்டான்ஸ் நிறுவனம் டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவேண்டும் அல்லது டிக்-டாக் செயலிக்கு அமெரிக்காவில் முழுமையாக தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் ஆகிய நிறுவனங்கள் பைட்டான்ஸ் நிறுவனத்திடமிருந்து டிக்-டாக் செயலியை வாங்குவதற்கான போட்டியில் மும்முரமாக இருந்தன.

 ஆனால், டிக்-டாக் செயலியை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தோல்வி அடைந்து விட்டது. செயலியை வாங்குவதற்கான தங்களது முன்மொழிவை பைட்டான்ஸ் நிறுவனம் நிராகரித்து விட்டதாக மைக்ரோசாப்ட் தெரிவித்தது. இந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த தோல்வி டிக்-டாக் செயலியை ஆரக்கிள் நிறுவனம் கைப்பற்றியதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 


Next Story