பாகிஸ்தானில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு


FIle photo/ AFP
x
FIle photo/ AFP
தினத்தந்தி 15 Sep 2020 6:15 PM GMT (Updated: 15 Sep 2020 6:15 PM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐந்து மாதங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இஸ்லமாபாத்,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் கடந்த மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கல்வி நிலையங்கள் மூடப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது பாகிஸ்தானில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது.  இதையடுத்து, பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளுடன் பள்ளி, கல்லூரிகளை திறக்க பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது. 

இதன்படி, இன்று முதல்(15ம் தேதி) பல்கலைகழகங்கள் மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. வரும் 23-ம் தேதி முதல் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. துவக்கப்பள்ளிகள் வரும் 30 ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது. 

ஆசிரியர்கள் மாணவர்கள் முககவசம் அணிவது கட்டாயமாகும். பள்ளி நுழைவு வாயிலில் கைகழுவுதல் மற்றும் சானிடைசர் வைத்திருக்க வேண்டும். அனைத்து ஆண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


Next Story