கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா


கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா
x
தினத்தந்தி 15 Sep 2020 10:56 PM GMT (Updated: 15 Sep 2020 10:56 PM GMT)

கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைகோள்களை சீனா விண்ணுக்கு அனுப்பியது.

பீஜிங், 

சீனாவின் ஜிலின் மாகாணம் சாங்சுன் நகரில் மஞ்சள் கடல் பகுதியில் சீனா தனது 2-வது கடல் ஏவுதளத்தை அமைத்துள்ளது. நேற்று இந்த ஏவுதளத்தில் உள்ள ஒரு கப்பலில் இருந்து ராக்கெட் ஒன்றை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட்டில் 9 செயற்கைகோள்கள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

லாங் மார்ச் 11 கேரியர் ராக்கெட், 3 வீடியோ செயற்கைகோள்கள், 6 புஷ்புரூம் செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. தலா 42 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள்கள் வேளாண்மை, வனவியல் நில வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் தொலைநிலை உணர்திறன் சேவைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 6 செயற்கைகோள்களும் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனா விண்ணுக்கு அனுப்பிய செயற்கைகோள் ஒன்று சுற்றுவட்ட பாதையில் நுழையாமல் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story