உலக செய்திகள்

இந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை + "||" + Digging graves for COVID-19 victims: Punishment in Indonesia for not wearing masks

இந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை

இந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை
இந்தோனேசியாவில் முக கவசம் அணியாதவர்களுக்கு நூதன தண்டனை விதிக்கப்படுகிறது.

ஜகார்த்தா, 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிவது பல்வேறு நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் முக கவசம் அணியாத நபர்களுக்கு சிறை, அபராதம் உள்ளிட்ட தண்டனைகளும் வழங்கப்பட்டு விடுகிறது.

இந்த நிலையில் இந்தோனேசியாவில் முக கவசம் அணியாமல் போலீசாரிடம் சிக்கினால் அவர்கள் கல்லறைகளை தோண்டவேண்டும் என்று நூதன தண்டனை வழங்கப்படுகிறது. அந்த நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் தான் இந்த நூதன தண்டனை வழங்கப்படுகிறது.

அங்கு முக கவசம் இல்லாமல் பிடிபடும் நபர்கள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு கல்லறைகளை தோண்டுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கொரோனா பாதித்து மரணமடைபவர்களை அடக்கம் செய்ய, குழிகள் தோண்டுவதற்கு எங்களிடம் தற்போது 3 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். எனவே முக கவசம் அணியாமல் பிடிபடும் நபர்களை அவர்களுடன் வேலை செய்ய வைக்கலாம் என்று திட்டமிட்டேன்” என்று கூறினார்.

மேலும் அவர், “கொரோனா காலத்தில் முக கவசம் மிகவும் அத்தியாவசியமானது. எனவே இந்த தண்டனையானது விதிமீறல்களுக்கு எதிராக ஒரு தடுப்பு விளைவை உருவாக்கும் என்று நம்புகிறேன்,” என்றும் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் - இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி
ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் என்று சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
2. அடுத்த ஆண்டில் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
2021-ஆம் ஆண்டு முதல் காலாண்டில் கொரோனா தடுப்பூசி கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
3. உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை சப்ளை செய்ய யுனிசெப் அமைப்பு ஏற்பாடு
மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசியை வாங்கி பல்வேறு நாடுகளுக்கும் சப்ளை செய்யும் பணியை யுனிசெப் அமைப்பு முன்னின்று மேற்கொள்ள இருக்கிறது.
4. அமெரிக்காவில் நவம்பர் 1-ந் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட திட்டம்
அமெரிக்காவில் நவம்பர் 1-ந் தேதிக்குள் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிட்டுள்ள அரசு, அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளது.
5. இந்தியாவில் இன்னும் 73 நாட்களில் கொரோனா தடுப்பூசி ?
இந்தியாவில் இன்னும் 73 நாட்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.