உலக செய்திகள்

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவு + "||" + 5.4 magnitude earthquake jolts Kathmandu early in the morning

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவு

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவு
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி உள்ளது.
காத்மாண்டு, 

நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.4ஆக பதிவாகி உள்ளது. இத்தகவலை தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை (புதன்கிழமை) சுமார் 05.04 மணிக்கு தலைநகர் காத்மாண்டுவில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் இந்த நிலநடுக்கமானது நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கிழக்கே 50 கிமீ தொலைவில் மையமாக வைத்து உண்டானதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. நேபாளத்தில் நிலச்சரிவு: 10 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் மாயம்
நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.