உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.97 கோடியாக உயர்வு + "||" + Worldwide, the number of corona victims has risen to 2.97 crore

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.97 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.97 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.97 கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா, 

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. ஏறத்தாழ 9 மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும் தொற்று பரவல் சில நாடுகள் இன்னும் வேகமாகவே உள்ளது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 2 கோடியே 97 லட்சத்து 14 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2 கோடியே 15 லட்சத்து 22 ஆயிரத்து 606 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 38 ஆயிரத்து 388 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 72 லட்சத்து 53 ஆயிரத்து 726 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 866 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா       -  பாதிப்பு - 67,87,665, உயிரிழப்பு - 2,00,174, குணமடைந்தோர் - 40,61,903
இந்தியா       -    பாதிப்பு - 50,18,034, உயிரிழப்பு -   82,091, குணமடைந்தோர் - 39,39,111
பிரேசில்       -    பாதிப்பு - 43,84,299, உயிரிழப்பு - 1,33,207, குணமடைந்தோர் -  36,71,128
ரஷியா        -    பாதிப்பு - 10,73,849, உயிரிழப்பு -  18,785, குணமடைந்தோர்  -  8,84,305
பெரு         -     பாதிப்பு -  7,38,020, உயிரிழப்பு -  30,927, குணமடைந்தோர்  -  5,80,753

தொடர்புடைய செய்திகள்

1. உலக அளவில் மேலும் 15 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளிய கொரோனா - யுனிசெப் நிறுவனம் கவலை
உலக அளவில் மேலும் 15 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளிய கொரோனா என்று யுனிசெப் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.
2. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 3 கோடியாக உயர்ந்துள்ளது.
3. உலக அளவில் அதிகம் பேர் பங்கேற்ற காணொலி கூட்டங்களில் திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு 2-வது இடம்
உலக அளவில் அரசியல் கட்சியை சேர்ந்த அதிகம் பேர் பங்கேற்ற காணொலி கூட்டங்களில் திமுக பொதுக்குழு கூட்டம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4. உலக அளவில் கொரோனா தொற்று குறையாத ஒரே நாடு இந்தியா தான் - டாகடர் ராமதாஸ் விமர்சனம்
உலக அளவில் கொரோனா தொற்று குறையாத ஒரே நாடு இந்தியா தான் என்று பா.ம.க நிறுவனர் டாகடர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
5. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடம் - டிரம்ப் சொல்கிறார்
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பரிசோதனையில் இந்தியா 2-வது இடத்தில் இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.