ரஷியாவின் கொரோனா ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுக்கு விற்பனை


ரஷியாவின் கொரோனா ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுக்கு விற்பனை
x
தினத்தந்தி 16 Sep 2020 10:34 AM GMT (Updated: 16 Sep 2020 10:35 AM GMT)

ரஷியாவின் கொரோனா ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவின் டாக்டர் ரெட்டி ஆய்வகங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மாஸ்கோ: 

உலகிலேயே கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த முதல் நாடு ரஷியா தான். பல மேற்கத்திய நாடுகள் ரஷியாவின் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்ட வேகம் குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்தினர. நுட்பமான சில விஷயங்களை பரிசோதனை செய்யாமல் இதனை பயன்பாடுக்கு கொண்டு வருவதாக தெரிவித்து இருந்தன.

இந்த தடுப்பூசி தேவையான அனைத்து சோதனைகளிலும் வெற்றி கண்டுவிட்டதாக கடந்த மாதம் விளாடிமர் புதின் தெரிவித்து இருந்தார். தனது மகள்களில் ஒருவருக்குக் கூட அந்த தடுப்பூசி போடப்பட்டதாக அவர் கூறி இருந்தார்.

ஸ்பூட்னிக் வி என்ற அந்த தடுப்பூசிக்கு இரண்டு பரிசோதனைகள் ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடந்தது.

தலா 38 மருத்துவ தன்னார்வலர்களுக்கு அந்த தடுப்பூசி முதலில் செலுத்தப்பட்டதாகவும், அதன் பின் மூன்று வாரங்கள் கழித்து கூடுதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மிகவும் பொதுவான பக்க விளைவுகளாக தலைவலி மற்றும் மூட்டு வலி ஆகியவை இருந்தன

தற்போது ரஷியாவில் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது.

இந்த நிலையில் ரஷியாவின் தடுப்பூசி இந்தியாவுக்கு வருகிறது.

இந்தியாவில் ஒழுங்குமுறை ஒப்புதல் கிடைத்தவுடன் கொரோனாவுக்கு எதிராக இந்தியாவின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுக்கு 100 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி வழங்கப்படும் என்று ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி விநியோகத்திற்கு இந்திய நிறுவனத்துடன் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டதாக கூறி உள்ளது.


Next Story