3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் - டொனால்டு டிரம்ப்


3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் -  டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 16 Sep 2020 3:33 PM GMT (Updated: 16 Sep 2020 3:33 PM GMT)

இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உறுதியாக அறிவித்துள்ளார்.

வாஷிங்டன்

பிலடெலபியாவில்  அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசும் போது கூறியதாவது:-

பேசுகையில், கொரோனா தடுப்பு மருந்தை நெருங்கிவிட்டோம். முந்தைய அரசாக இருந்தால் தடுப்பு மருந்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வர பல ஆண்டுகாலம் எடுத்திருக்கும்.

ஆனால், தன்னுடைய அரசு இன்னும் சில வாரங்களில் தடுப்பூசியை அறிமுகம் செய்ய உள்ளது.இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது. 

Next Story