உலக செய்திகள்

பிறந்து 12 நாட்களே ஆன குழந்தையை வளர்ப்பு நாயே கடித்துக் குதறி கொன்றது + "||" + Newborn baby dies and two arrested after Doncaster dog attack

பிறந்து 12 நாட்களே ஆன குழந்தையை வளர்ப்பு நாயே கடித்துக் குதறி கொன்றது

பிறந்து 12  நாட்களே ஆன குழந்தையை வளர்ப்பு நாயே கடித்துக் குதறி கொன்றது
பிறந்து 12 நாட்களே ஆன குழந்தையை வீட்டில் வளர்க்கபட்ட நாயே கடித்துக் குதறி கொன்று உள்ளது.
லண்டன்

பிறந்து 12  குழந்தையை அந்த குடும்பம் வளர்த்த நாயே கடித்துக் குதறி கொன்ற கோர சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. இங்கிலாந்தின் டான்காஸ்டரில் பிறந்து 12 நாட்களே ஆன எலோன் என்ற குட்டிக் குழந்தையை நாய் ஒன்று கடித்துக் குதறிக் கொன்றுள்ளது.

இத்தனைக்கும், அந்த நாய் அந்த குழந்தை வீட்டில் வளர்க்கப்படும் நாய்தான். எனவே, குழந்தையின் தாயான அபிகாயில் எல்லிஸ் (27) மற்றும் அவரது காதலர் ஸ்டீபன் ஜாய்ன்ஸ் (35) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

கவனக் குறைவால் உயிரிழப்பு நடந்ததற்கு காரணமாக இருந்ததாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அப்பகுதியில் வசிப்பவர்கள், அந்த நாய் முரட்டுத்தனமான நாய் அல்ல என்று கூறினாலும், குழந்தையை மீட்கச் சென்ற மூன்று பொலிசாரை தெருவுக்கு இழுத்து வரும் அளவுக்கு அது பலமுள்ளதாக இருந்திருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மொபைலில் பேசிய படி காரை ஓட்டி முதியவர் மீது மோதிய இளம்பெண்; அவர் மோதியது யார் மீது தெரியுமா...?
இங்கிலாந்தில் முதியவர் ஒருவர் மீது காரை மோதிவிட்டு தப்பிவிட்டார் ஒரு பெண். ஆனால், தான் காரை மோதியது தன் சொந்த மாமனார் மீதுதான் என்பது பின்னர்தான் அவருக்கு தெரியவந்தது.