கொரோனா தடுப்பூசி: அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடு


கொரோனா தடுப்பூசி:  அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடு
x
தினத்தந்தி 17 Sep 2020 11:05 AM GMT (Updated: 17 Sep 2020 11:05 AM GMT)

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு உள்ளது.

வாஷிங்டன்

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்க தேர்தலில் கொரோனா தடுப்பூசி விவாதம் முக்கிய பங்கு வகிக்கிறது. நேற்று வாக்காளர்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். கொரோனாவுக்கான தடுப்பு மருந்து அடுத்த மாத இறுதிக்குள் தயாராகி விடும் என தெரிவித்தார்.

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் ராபர்ட் ரெட்ஃபீல்டு முகக்கவசம் மிக முக்கியமானது என தெரிவித்தார். கொரோனா தடுப்பூசியை விட முகக்கவசம் அணிவது அதிக பலன்களை கொடுக்கும் என கூறியிருந்தார். ஏனென்றால் அந்த தடுப்பூசியில் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவுக்கு இருக்கும் என்பது கேள்விக்குறியான ஒன்று என்று குறிப்பிட்டார். இந்தக் கருத்துக்கு அதிபர் டிரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். தடுப்பூசியை விட முகக்கவசம் பயனுள்ளதாக இருக்காது என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், முகக்கவசம் அணிவதில் நிறைய சிக்கல் உள்ளது. அதனை கவனமாக கையாள வேண்டியது அவசியம். தடுப்பூசியை விட முகக்கவசம் முக்கியமானது இல்லை. முகக்கவசம் அணிவதை நிறைய பேர் விரும்புவதில்லை. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி அதிக திறன் வாய்ந்ததாக இருக்கும். அதில் எந்த பிரச்சனையும் இருக்காது’என்றார்.

2020 தேர்தல் பிரச்சாரத்தின் மைய புள்ளியாக மாறியுள்ள தடுப்பூசி பிரச்சினையில் டிரம்பிற்கும் சுகாதார நிபுணர்களுக்கும் இடையிலான முரண்பாடு ஏற்பட்டு உள்ளது.

Next Story