உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 17 Sep 2020 10:15 PM GMT (Updated: 17 Sep 2020 7:33 PM GMT)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் நகரில் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

* ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள நங்கார்ஹர் மாகாணத்தில் பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 35 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 25 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் ஜோஸ் நகரில் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள கெர்மாடெக் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் இல்லை.

* மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டுக்கு 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மனிதாபிமான உதவிகளை வழங்க உள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது.

*ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவின் வடகிழக்கு பகுதியில் மோரேடோ நகரில் உள்ள சிறையில் கைதிகள் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 3 கைதிகள் கொல்லப்பட்ட நிலையில் 200-க்கும் அதிகமான கைதிகள் சிறையிலிருந்து தப்பி ஓடினர்.

Next Story