அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டு


அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Sep 2020 2:14 AM GMT (Updated: 18 Sep 2020 2:14 AM GMT)

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது முன்னாள் மாடல் நடிகை பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் ஏமி டோரிஸ் என்கிற மாடல் நடிகை  அதிபர் டிரம்ப் மீது  பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த  1997 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த டென்னிஸ்  தொடரின் போது,  மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் அந்நிகழ்வில் கலந்து கொண்டார். 

அதில் ஏமியும் கலந்து கொண்டுள்ளார். அப்போது டிரம்ப் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் தனது அனுமதி இல்லாமல் முத்தம் கொடுக்க முயன்றதாகவும்  குற்றம் சாட்டியுள்ளார். கார்டியன் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த ஏமி தன் விருப்பத்திற்கு மாறாக டிரம்ப் தன்னை இறுக அணைத்ததாகவும் முத்தமிட்டதாகவும் அவரது பிடியில் இருந்து தான் வெளியே வர முயன்றபோது முடியாமல் போனது எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்த்தில் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் மீது வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.  23 ஆண்டுகள் கழித்து சரியாக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு  முன்னர் மாடல் நடிகை புகார் அளித்துள்ளது அந்நாட்டு அரசியலில் அனலை கிளப்பியுள்ளது.  

 ஆனால்,  இது குறித்து பேசிய டிரம்ப், தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக திட்டமிட்டு எதிர்க்கட்சிகள் இவரை ஏவிவிட்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.  டிரம்ப்க்கு எதிராக இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டு எழுவது இது முதல் முறையல்ல. இதுவரை 12-க்கும் மேற்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கள் அவர் மீது எழுந்துள்ளது. 


Next Story