கொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு


கொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் - ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு
x
தினத்தந்தி 18 Sep 2020 3:22 AM GMT (Updated: 18 Sep 2020 3:22 AM GMT)

கொரோனாவை வெல்ல உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

நியூயார்க், 

கொரோனா தொற்று உலகம் முழுவதும் தொடர்ந்து பரவி வரும் நிலையில், இது நம்பர் ஒன் உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், 

‘கொரோனாவை வெல்வதற்கு சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. பலர் தங்கள் நம்பிக்கையை ஒரு தடுப்பூசி மீது வைத்திருக்கிறார்கள். ஆனால் தெளிவாக இருக்கட்டும், ஒரு தொற்றுநோய்க்கான சஞ்சீவி எங்கும் இல்லை. இந்த நெருக்கடியை ஒரு தடுப்பூசி மட்டும் போக்காது. நிச்சயமாக அது அருகில் இல்லை’ என்று தெரிவித்தார். 

புதிய தொற்றுகளை கட்டுப்படுத்துவதற்கு புதிய மற்றும் ஏற்கனவே இருக்கும் வாய்ப்புகளை நாடுகள் பெருமளவில் விரிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட குட்டரெஸ், தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கும், உயிர்களை காக்கவும் குறிப்பாக அடுத்த 12 மாதங்களுக்குள்ளாக முக்கிய சிகிச்சையை ஒன்றிணைந்து வழங்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

கொரோனா பெருந்தொற்று நமது வாழ்நாளில் கண்டிராத ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாக கூறிய அவர், எனவே இந்த ஆண்டு ஐ.நா. பொதுச்சபை கூட்டம் வழக்கமான முறையில் இருக்காது எனவும் குறிப்பிட்டார்.

Next Story