அமீரகத்தில் குடும்ப விழாக்களில் 10 பேருக்கு மேல் பங்கேற்க தடை


அமீரகத்தில் குடும்ப விழாக்களில் 10 பேருக்கு மேல் பங்கேற்க தடை
x
தினத்தந்தி 18 Sep 2020 6:26 PM GMT (Updated: 18 Sep 2020 6:26 PM GMT)

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக குடும்ப விழாக்களில் 10 பேருக்கு மேல் கலந்து கொள்ள அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

அமீரகம்,

கொரோனா தொற்று பரவலால் உலக நாடுகள் பலவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடிக்க பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 10 பேருக்கு மேல் குடும்ப விழாக்களில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசங்களை பயன்படுத்துவது, தனிமனித இடைவெளிகளைக் கடைபிடிப்பது மற்றும் கிருமிநாசினிகளை பயன்படுத்துவது ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story