ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை


ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை
x
தினத்தந்தி 19 Sep 2020 1:57 AM GMT (Updated: 19 Sep 2020 1:57 AM GMT)

ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்து விடும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபேற்று வருகிறது. உலக அளவில் கிட்டதட்ட 30 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன. 

இந்த சூழலில்,  அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க  உள்ளது. எனவே, அதற்குள் தடுப்பூசியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார்.  இந்த நிலையில், வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் அப்போது கூறியதாவது:- 

“ஒவ்வொரு மாதத்திலும் நூற்றுக்கணக்கான தடுப்பூசிகள் கிடைக்கும் . தேசிய மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள் அங்கீகரித்த 24 மணி நேரத்திலேயே கொரோனா தடுப்பு மருந்துகளின் விநியோகம் தொடங்கி விடும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி அமெரிக்கர்களுக்கு போதிய அளவு கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறேன்.  

நாம் குறுகிய காலத்திலேயே தகுந்த தடுப்பு மருந்தினை பெற்று கொரோனாவை வென்று விடுவோம். அக்டோபர் மாதத்தில் கொரோனா தடுப்பூசி மருந்திற்கான அனுமதி கிடைத்து விடும் என எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்தார். 


Next Story