உலக செய்திகள்

உலகைச் சுற்றி... + "||" + Around the world ...

உலகைச் சுற்றி...

உலகைச் சுற்றி...
பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் 645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
* ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குண்டூஸ் மாகாணத்தில் போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த மோதலில் 3 போலீசாரும், பயங்கரவாதிகள் 3 பேரும் பலியாகினர். அதே போல் தாக்கர் மாகாணத்தில் ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த மோதலில் 2 ராணுவ வீரர்களும் 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.


* பாப்புவா நியூ கினியாவின் வடக்கு பகுதியிலுள்ள லே நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் இல்லை.

* ஜப்பானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோஷிஹைட் சுகாவை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் சந்தித்து பேச உள்ளார்.

* பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 858 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 793 ஆக அதிகரித்துள்ளது.

* நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் போகோஹரம் பயங்கரவாதிகள் 16 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 38 பேர் படுகாயம் அடைந்தனர்.

* பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் 645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 5 ஆயிரத்து 31 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச் சுற்றி...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 2 மாதங்களுக்கும் மேலாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது.
2. உலகைச் சுற்றி...
ரஷிய தலைநகர் மாஸ்கோவின் புறநகர் பகுதியில் 4 மீட்டர் உயரம் கொண்ட நடை பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 25 பேர் படுகாயமடைந்தனர்.
3. உலகைச் சுற்றி...
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் முஸ்லிம் மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிகையின் பழைய அலுவலகத்தில் நேற்று கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
4. உலகைச் சுற்றி...
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள போலீஸ் நிலையத்தில் கைதி ஒருவர் போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
5. உலகைச் சுற்றி...
அர்ஜெண்டினா நாட்டின் அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் ஐ.நா. வில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.