உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடியாக உயர்வு + "||" + Covid 19: world wide update on sep 20

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  3.09- கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடியாக உயர்ந்துள்ளது.
ஜெனீவா, 

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன் முதலில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று முதன் முதலாக வெளிப்பட்டு ஏறத்தாழ  9 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் தொற்று பரவல் இன்னும் சில நாடுகளில் உச்சத்தில் உள்ளன. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளும் மருத்துவ பரிசோதனைகள் கட்டத்திலே இருப்பதால், தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன. 

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை  2.25-கோடியாக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9.60-லட்சமாக உள்ளது.  அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,525-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,967,395- ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,528,347- ஆக உயர்ந்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ பரிசோதனைக்கு முன்பே சீனாவில் 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி- உலக அரங்கில் அதிர்ச்சி
சீனாவில் தடுப்பூசி பரிசோதனைகள் முடியும் முன்பாகவே 60 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
2. கொரோனா அச்சுறுத்தல்: அயர்லாந்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிப்பு
அயர்லாந்தில் புதிதாக 1031 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் 50 சதவிதம் பேர் கொரோனாவால் பாதிக்க வாய்ப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றின் உச்சம் செப்டம்பர் மாத மத்தியில் இருந்ததாகவும் அதன்பிறகு குறையத் தொடங்கி உள்ளதாகவும் மருத்துவ வல்லுநர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
4. அசாமில் மேலும் 698- பேருக்கு கொரோனா
அசாமில் மேலும் 698- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் கணிசமாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.