உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 20 Sep 2020 9:45 PM GMT (Updated: 20 Sep 2020 7:20 PM GMT)

வியட்னாமின் மத்திய மாகாணங்களை நவுல் என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது.

* வியட்னாமின் மத்திய மாகாணங்களை நவுல் என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. புயல் தொடர்பான சம்பவங்களில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

* பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணம் வடக்கு வஜிரிஸ்தான் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

* மியான்மர் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள பால்ம் நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றி தகவல் இல்லை.

* அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க்கின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள அந்த பதவிக்கு பெண் ஒருவரை நியமனம் செய்வேன் என்றும் அடுத்த வாரம் இந்த நியமனம் நடைபெறும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

* ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவின் தெற்கு பகுதியில் உள்ள அசாந்தி பிராந்தியத்தில் நடந்த சாலை விபத்தில் கால்பந்து விளையாட்டு வீரர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

* பிரேசிலில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 739 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

* ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று ஒரே நாளில் 809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 84 ஆயிரத்து 242 அதிகரித்துள்ளது.

Next Story