உலக செய்திகள்

உலகம் முழுவதும் சீன ராணுவ கண்காணிப்பில் உள்ள 24 லட்சம் விஐபிகள்; இந்தியாவில் 10 ஆயிரம் பேர் + "||" + 24 lakh VIPs under Chinese military surveillance worldwide

உலகம் முழுவதும் சீன ராணுவ கண்காணிப்பில் உள்ள 24 லட்சம் விஐபிகள்; இந்தியாவில் 10 ஆயிரம் பேர்

உலகம் முழுவதும் சீன ராணுவ கண்காணிப்பில் உள்ள 24 லட்சம் விஐபிகள்; இந்தியாவில் 10 ஆயிரம் பேர்
உலகம் முழுவதும் முக்கியமான 24 லட்சம் பேரை சீன ராணூவம் கண்காணித்து வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த 10 ஆயிரம் பேரும் கண்காணிக்கபட்டு வருகின்றனர்.
பீஜிங்

சீனாவின் கண்காணிப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இந்தியர்கள் 10,000 பேர் சிக்கியுள்ளதாக வெளியான தகவலையடுத்து, தற்போது உலகமெங்கும் சுமார் 24 லட்சம் பேர் இந்த வலையில் சிக்கியிருப்பது அம்பலமாகியுள்ளது.

குறித்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 250,000 பேர்கள் தொடர்பான தகவல்களே தற்போது வெளியானதாக கூறப்படுகிறது.சீனா இந்த ரகசிய கண்காணிப்பு நடவடிக்கையை பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த கண்காணிப்பு வளையத்தில் இந்தியர்கள் மட்டுமின்றி, முக்கிய பொறுப்பில் இருக்கும் அமெரிக்க நாட்டவர்கள் 52,000 பேர்கள், ஆஸ்திரேலிய நாட்டவர்கள் 35,000 பேர், இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் 9,700 பேர்,கனடா நாட்டவர் 5,000 பேர், இந்தோனேசிய நாட்டவர்கள் 2,100 பேர், முக்கிய பொறுப்புகளில் இருக்கும் மலேசிய நாட்டவர்கள் 1,400 பேர், நியூசிலாந்து நாட்டவர்கள் 793 பேர்கள் என சீனாவின் குறிப்பிட்ட நிறுவனம் தொகுத்து வைத்துள்ளதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

உலகமெங்கும் ரகசியமாக செயல்படும் 20 நிறுவனங்கள் மூலமாகவே சீனா இந்த முக்கியஸ்தர்களின் தகவல்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.இதில் ஒரு நிறுவனம் அமெரிக்காவின் கான்சாஸ் பகுதியிலும் இன்னொன்று தென் கொரிய தலைநகரிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

முக்கியமாக ராணுவம் தொடர்பான தகவல்களுக்கு மட்டுமே குறித்த நிறுவனம் முக்கியத்துவம் அளிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.மேலும் குறித்த நிறுவனம் ரகசியமாக சேகரித்துள்ள தகவல்கள் அனைத்தும் சீனா அரசுக்கும் ராணுவத்திற்கும் பயன்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் முதல் குற்றவாளிகள் வரை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.மட்டுமின்றி சீனாவின் ரகசிய தகவல் சேகரிப்பு நிறுவனங்களில் எஞ்சிய 18 எண்ணம் எங்கே இருந்து செயல்படுகிறது என்பது தொடர்பில் கண்டறியப்பட்டால் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவின் உத்தரவின் பேரில் பூட்டான் பிரதமரிடம் பேசிய இம்ரான்...!!
சீனாவின் திட்டங்களை நிறைவேற்ற பூட்டானுடன் நெருக்காமாக இருக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது.
2. சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் அடுத்த நகர்வாகா அதன் ஊடகங்களை தன்வசப்படுத்த திட்டம்
சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் அடுத்த நகர்வாக சீனாவின் அச்சு ஊடகங்களை தன்வசப்படுத்த திட்டமிட்டு உள்ளது.
3. சீனாவின் கொரோனா தடுப்பூசியை வாங்க மாட்டோம்- பிரேசில் அதிபர்
சீனாவின் உகான் நகரில் தான் கொரோனா வைரஸ் முதன் முதலாக கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்டது.
4. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சீனா தைவானுடன் நெருக்கம் காட்டி வரும் அமெரிக்காவுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
5. சீனாவில் நூடுல்ஸ் உணவு சாப்பிட்டஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி
சீனாவில் பிரீசரில் பாதுகாக்கப்பட்ட நூடுல்ஸ் உணவை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.