இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெருவாரியான மக்களுக்கு நம்பிக்கை இல்லை


இங்கிலாந்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பெருவாரியான  மக்களுக்கு நம்பிக்கை இல்லை
x
தினத்தந்தி 21 Sep 2020 1:12 PM GMT (Updated: 21 Sep 2020 1:12 PM GMT)

பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது இங்கிலாந்து மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவதாக சர்வே ஒன்று தெரிவித்து உள்ளது.

லண்டன்

இங்கிலாந்தில் கொரோனா தொற்றுநோயைக் கையாளுதலில் பிரதமர் போரிஸ்  ஜான்சன் மீதான பொதுமக்களின் நம்பிக்கை கடும் சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக  போரிஸ் ஜான்சன்  ரகசியமாக முன்னெடுத்த ஆய்வில் இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது.அது மட்டுமின்றி, இங்கிலாந்தில்  மூன்றில் ஒருவர் மட்டுமே அரசின் சமூக இடைவெளி விதியை பின்பற்றுவதாகவும், கொரோனா தொடர்பான மக்களின் பீதி என்பது தற்போதும் அதிகரித்து வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அடுத்த சில தினங்களில் நாடுதழுவிய ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவர போரிஸ் அரசாங்கம் திட்டமிட்டு வரும் நிலையில், இந்த ஆய்வறிக்கையானது போரிஸ் அரசாங்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் வெறும் 26 சதவீத மக்கள் மட்டுமே, போரிஸ் ஜான்சன் நிர்வாகம் இந்த கொரோனா காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளனர்.  இதுவரையான ஆய்வுகளில் வெளியான மிகக் குறைந்த சதவீதம் என கூறப்படுகிறது.

மேலும், ஊரடங்கு விதிகளை அமுலுக்கு கொண்டுவருவதில் போரிஸ் ஜான்சன் அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக 20 சதவீத பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.ஆனால் 31 சதவீத மக்கள் கலக்கத்தில் இருப்பதாகவும், மிகுந்த கவலையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.இதனிடையே தொழிலாளர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லியாம் பைர்ன் போரிஸ் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.


Next Story