உலக செய்திகள்

அக்டோபர் மத்தியில் நாள் ஒன்றுக்கு 50,000 கொரோனா பாதிப்புகள்- இங்கிலாந்து அரசின் ஆலோசகர் எச்சரிக்கை + "||" + UK heading for 50,000 coronavirus cases per day if no action is taken, government scientists warn

அக்டோபர் மத்தியில் நாள் ஒன்றுக்கு 50,000 கொரோனா பாதிப்புகள்- இங்கிலாந்து அரசின் ஆலோசகர் எச்சரிக்கை

அக்டோபர் மத்தியில் நாள் ஒன்றுக்கு 50,000 கொரோனா பாதிப்புகள்- இங்கிலாந்து அரசின் ஆலோசகர் எச்சரிக்கை
அக்டோபர் மத்தியில் நாள் ஒன்றுக்கு 50,000 கொரோனா பாதிப்புகள்- இங்கிலாந்து அரசின் ஆலோசகர் எச்சரிக்கை
லண்டன்

இங்கிலாந்தில் இனிமேலும் உரிய நடவடிக்கை எடுக்க தாமதித்தால் அக்டோபர் மத்தியில் நாள் ஒன்றுக்கு 50,000 கொரோனா பாதிப்புகள் உறுதி என அரசின் முக்கிய ஆலோசகர் எச்சரித்துள்ளார்.இதனால் நாள் ஒன்றுக்கு 200 மரணங்கள் நிகழ்வதையும் கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்றும் சர் பேட்ரிக் வாலன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் ஞாயிறு மட்டும் புதிதாக 3,899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.சிகிச்சை பலனின்றி 18 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையிலேயே சர் பேட்ரிக் வாலன்ஸ் இங்கிலாந்து அரசை எச்சரித்துள்ளார்.

மேலும், தற்போதைய சூழலில் ஒவ்வொரு ஏழு நாட்களிலும் தொற்றுநோய் இரட்டிப்பாகிறது என கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதே நிலை நீடித்தால் அக்டோபர் மத்தியப் பகுதியில் இங்கிலாந்தில் நாள் ஒன்றுக்கு 50,000 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி என வாலன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நவம்பர் மத்தியப்பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு 200 மரணங்களை எதிர்பார்க்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலையை முறியடிக்க துரிதமான நடவடிக்கை தேவைப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. 5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை தயாரிக்க நாங்கள் தயார்- ஆதார் பூனவல்லா
5 கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் 100 கோடி டோஸை எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகிறார்
2. இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்- இலங்கை அரசு மேல்முறையீடு
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இங்கிலாந்து நீக்கியது. இதை எதிர்த்து இலங்கை அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
3. இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி...!! மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,?
இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி மத்திய அரசு ரூ.51642 கோடி ( 7 பில்லியன் டாலர்கள் ) ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
4. தடுப்பூசி தற்காலிகமானது... கொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து
கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என லண்டன் நிபுணர் கூறி உள்ளார்.
5. இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்
கொரோனா தாக்கத்திற்கு பிறகு இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்கூறினார்.