உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்குச் செல்லும் வரும் அனைத்து விமானங்களும் நிறுத்தம்-சவுதி அரேபியா + "||" + Saudi Arabia suspends flights to and from India

கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்குச் செல்லும் வரும் அனைத்து விமானங்களும் நிறுத்தம்-சவுதி அரேபியா

கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்குச் செல்லும் வரும் அனைத்து  விமானங்களும் நிறுத்தம்-சவுதி அரேபியா
கொரோனா பாதிப்பால் இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் வரும் அனைத்து விமானங்களையும் சவுதி அரேபியா நிறுத்தி உள்ளது.
ரியாத்

சவுதி அரேபியாவின் சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் (ஜிஏசிஏ) இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளது.

இந்தியாவைத் தவிர, பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவுக்குச் செல்லும் விமானப் பயணங்களும் சவுதி அரேபியாவால் நிறுத்தப்பட்டுள்ளன.

சவுதி அரேபியாவின் சிவில் ஏவியேஷன் பொது ஆணையத்தின் அதிகார பூர்வ அறிக்கையில்,  "சவூதி அரேபியா இந்தியா, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கான பயணங்களை நிறுத்தியுள்ளது என கூறப்பட்டூள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட் அரசாங்கத்தின் விதிகளின்படி, இந்தியாவில் இருந்து பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளும் பயணத்திற்கு 96 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனையின் அசல் கொரோனா இல்லை என்ற சான்றிதழைக் கொண்டு வர வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை முதல் அக்டோபர் 3 வரை ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங் தடை செய்தது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 56,46,010 ஐ எட்டியுள்ளது, மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை 90,020 ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி தற்காலிகமானது... கொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து
கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என லண்டன் நிபுணர் கூறி உள்ளார்.
2. சிறப்புத் தொழில்களுக்கு எச் -1 பி தற்காலிக வணிக விசாக்கள் வழங்க அமெரிக்கா தடை ; இந்தியர்கள் பாதிப்பு
சிறப்புத் தொழில்களுக்கு தற்காலிக வணிக விசாக்களை வழங்க வேண்டாம் என்று வெளியுறவுத்துறை முன்மொழிந்துள்ளது இது நூற்றுக்கணக்கான இந்தியர்களை பாதிக்கலாம் என கூறப்படுகிறது
3. இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்
கொரோனா தாக்கத்திற்கு பிறகு இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்கூறினார்.
4. கடந்த ஆண்டைவிட நெல் கொள்முதல் 22% அதிகம் - மத்திய அரசு தகவல்
கடந்த ஆண்டைவிட நெல் கொள்முதல் 22% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
தைவானுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சீனா தைவானுடன் நெருக்கம் காட்டி வரும் அமெரிக்காவுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.