உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 23 Sep 2020 8:20 PM GMT (Updated: 23 Sep 2020 8:20 PM GMT)

அர்ஜெண்டினா நாட்டின் அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் ஐ.நா. வில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

* அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி பதவி நிரப்பப்படும் என உறுதியளித்துள்ள ஜனாதிபதி டிரம்ப் புதிய ஜனாதிபதிக்கான தனது பரிந்துரையை சனிக்கிழமை அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

* பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிரான நீடித்த மற்றும் மீளமுடியாத நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் பேரழிவு ஆயுதங்கள் தொடர்பான சர்வதேச கடமைகளுக்கு ஏற்ப வாழ தயாராக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் பதவிக்கு ஜனாதிபதி டிரம்பால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள வில்லியம் டோட் கூறினார்.

* ஐ.நா. சபையின் 75-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றிய அர்ஜெண்டினா நாட்டின் அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் ஐ.நா. வில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

* உலக நாடுகள் பொறாமைப்படும் அளவுக்கான மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் அமெரிக்காவிடம் உள்ளதாகவும், முடிவில்லாத அபத்தமான மற்றும் முட்டாள்தனமான வெளிநாட்டு போர்களிலிருந்து அமெரிக்காவை தள்ளி வைப்பதன் மூலம் அந்த ஆயுதங்களை ஒருபோதும் பயன்படுத்த வேண்டி இருக்காது என்று நம்புவதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.

* ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள லோகர் மாகாணத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் நடத்திய அதிரடி தாக்குதல்களில் பயங்கரவாதிகள் 25 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story