அமெரிக்காவில் இதுவரை 5.87 லட்சத்து குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி


அமெரிக்காவில் இதுவரை 5.87 லட்சத்து குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 24 Sep 2020 3:26 AM GMT (Updated: 24 Sep 2020 3:26 AM GMT)

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 5 லட்சத்து 87 ஆயிரம் குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

நியூயார்க்,

அமெரிக்காவில் இதுவரை 71.04 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.  உலக நாடுகளில் முதல் இடத்தில் உள்ள அந்த நாட்டில் பலி எண்ணிக்கை 2.05 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.  இதேபோன்று மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25.38 லட்சம் ஆக உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பின்னர் இதுவரை 5 லட்சத்து 87 ஆயிரத்து 948 குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது.

அவர்களில் கடந்த 3ந்தேதியில் இருந்து 15ந்தேதி வரை 74,553 குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.  இதனால் 2 வாரங்களில் 15 சதவீதம் அளவுக்கு பாதிப்பு அதிகரித்து உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றுகளால் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவது குழந்தைகளிடம் அரிதாகவே காணப்படுகின்றன.  எனினும், அவர்களுக்கு பரிசோதனை செய்வது, மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட விவரங்களை தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் வழங்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

வயது, இனம் அடிப்படையிலான உயிரிழப்பு விகிதங்களையும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இதனடிப்படையிலேயே கொரோனா பாதிப்புகளால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிந்து அதற்கேற்ப அவர்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது.

Next Story