உலக செய்திகள்

கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது : சீன வைராலஜி நிபுணர் + "||" + Chinese Virologist Who Claimed Covid-19 Man-Made in Wuhan Lab Says 'WHO Part of Cover Up'

கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது : சீன வைராலஜி நிபுணர்

கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியது : சீன வைராலஜி நிபுணர்
கொரோனாவை மறைக்க உலக சுகாதார நிறுவனம் உதவியதாக, சீனா வைராலஜி நிபுணர் கூறியுள்ளார்.
வாஷிங்டன்

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்று குறித்து சீன அரசு மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இது போன்ற சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன், சீனாவைச் சேர்ந்த வைராலஜி நிபுணர்  லீ மெங் யான் என்பவர் கொரோனா வைரஸ் உகான் மாகாண ஆராய்ச்சிக் கூடத்தில் உருவாக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து பேசிய லீ மெங் யான், கொரோனா வைரஸ் குறித்து உலகத்திற்கு தெரிவதற்கு முன்பே சீன அரசு அதனைக் குறித்து அறிந்திருந்ததாகவும், உலக சுகாதார நிறுவனம் இதனை மறைக்க சீன அரசாங்கத்திற்கு உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

சீன அரசு மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் லீ மெங் யான் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.