நடுக்கடலில் நடந்த பயங்கரம்! தென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட கொரியா


நடுக்கடலில் நடந்த பயங்கரம்! தென் கொரிய அதிகாரியை சுட்டுக் கொன்று உடலை எரித்து பஸ்பமாக்கிய வட கொரியா
x
தினத்தந்தி 24 Sep 2020 9:07 AM GMT (Updated: 24 Sep 2020 9:07 AM GMT)

காணாமல் போன தென் கொரிய மீன்வள அதிகாரியை வட கொரிய படைகள் சுட்டுக் கொன்று உடலை எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து பஸ்பமாக்கியதாக தென் கொரியா இராணுவம் தெரிவித்துள்ளது.

சியோல் 

வட கொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான கடல் எல்லையாக செயல்படும் இராணுவக் கட்டுப்பாட்டின் சர்ச்சைக்குரிய எல்லைக்கு அருகே கடந்த வாரம் தென் கொரிய மீன்வள அதிகாரி காணாமல் போனதாகக் கூறப்பட்டது.அந்த அதிகாரி வட கொரியாவிற்குள் நுழைய முயன்றதாக ஆதாரங்கள் காட்டுவதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

47 வயதான அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கான சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் வட கொரிய படைகள் கொரோனா வைரஸ் எதிர்ப்பு உத்தரவின் கீழ் செயல்பட்டிருக்கலாம் என்று தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது.

காணாமல் போன அதிகாரி வட கொரிய ரோந்து படகில் வைத்து விசாரிக்கப்பட்டதாகவும், பின்னர் உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் வட கொரிய படையினர் அவரை சுட்டுக் கொன்றதாக உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

பின்னர், அவரது உடலை எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து பஸ்பமாக்கியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் இதுபோன்ற அட்டூழியத்தை எங்கள் இராணுவம் கடுமையாக கண்டிக்கிறது, மேலும் விளக்கங்களை வழங்கவும், பொறுப்புள்ளவர்களை தண்டிக்கவும் கடுமையாகக் கோரிக்கை விடுக்கிறது என்று கூட்டுத் தலைவர்களின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஜெனரல் அஹ்ன் யங்-ஹோ கூறினார்.


Next Story