அரசியல் முடிவுகளை பாராளுமன்றத்தில் எடுக்க வேண்டும், இராணுவத் தலைமையகத்தில் அல்ல- மரியம் நவாஸ்


அரசியல் முடிவுகளை பாராளுமன்றத்தில் எடுக்க வேண்டும், இராணுவத் தலைமையகத்தில் அல்ல- மரியம் நவாஸ்
x
தினத்தந்தி 24 Sep 2020 12:46 PM GMT (Updated: 24 Sep 2020 1:01 PM GMT)

அரசியல் முடிவுகளை பாராளுமன்றத்தில் எடுக்க வேண்டும், இராணுவத் தலைமையகத்தில் அல்ல பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் துணைத்தலைவர் மரியம் நவாஸ் கூறி உள்ளார்.

இஸ்லாமாபாத்

ஜம்மு-காஷ்மீருக்குள் பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஒரு பிராந்தியமாக இந்தியா கருதும் பால்டிஸ்தானுக்கு தேர்தல்களை நடத்துவதற்கும், மாகாண அந்தஸ்தை அறிவிப்பதற்கும் பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த விவாத வேகம் அதிகரித்த போது, , எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள் ஜெனரல் பாஜ்வா மற்றும் ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ஃபைஸ் ஆகியோரை சந்தித்து பேசினர் என இரண்டு நாட்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு தகவல் கசிந்தது

இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் சார்பாக ஷாபாஸ் ஷெரீப், அவரது கட்சி சகாக்களான கவாஜா ஆசிப் மற்றும் அஹ்சன் இக்பால் ஆகியோர் கலந்து கொண்டனர். பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவால் பூட்டோ சர்தாரி மற்றும் செனட்டர் ஷெர்ரி ரெஹ்மான் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இராணுவத்துடன் நெருக்கமாக இருப்பதாகக் கருதப்படும் ரெயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் ஒருபுறம் இராணுவத்தை விமர்சித்ததற்காகவும், மறுபுறம் சந்தித்ததற்காகவும் எதிர்க்கட்சிகளை அவமதிக்க இந்த தகவலை வெளியிட்டார்.

இந்த கசிவு கலந்து கொண்டவர்களில் பெரும்பாலோரை சங்கடப்படுத்தியது. ஷாபாஸ் ஷெரீப் கூட்டத்தை உறுதிப்படுத்தினார், மேலும் எதுவும் கூறவில்லை. பிலாவால் பூட்டோ சர்தாரி அவர்கள் தேசிய பாதுகாப்பு குறித்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டதாகவும், இதுபோன்ற விளக்கங்கள் பொதுவாக ரகசியமாக வைக்கப்படுவதாகவும் தெளிவுபடுத்தினார்.

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுடனான உறவு மோசமடைதல் போன்ற தனது ஆட்சிக் காலத்தில் எழுந்த தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து பிரதமர் இம்ரான் கான் எதிர்க்கட்சிகளுடன் ஈடுபடத் தவறியதால், அவசரமாக அழைக்கப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இராணுவத்துடனான சந்திப்பை நியாயப்படுத்தினார். கூட்டத்தில் கில்கிட் பால்டிஸ்தான் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் துணைத் தலைவர் மரியம் நவாஸ் அரசியல் முடிவுகளை பாராளுமன்றத்தில் எடுக்க வேண்டும், இராணுவத் தலைமையகத்தில் அல்ல என குற்றம்சாட்டி உள்ளார்.

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் 46 வயதான மகள் ராவல்பிண்டியில் உள்ள ராணுவத்தின் பொதுத் தலைமையகத்தில் (ஜிஹெச்யூ) முக்கிய எதிர்க்கட்சி நபர்களுடன் ராணுவத் தலைவர் ஜெனரல் கமர் பஜ்வா மற்றும் ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் பைஸ் ஹமீத் சந்திப்பு குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர் அரசியல் முடிவுகளை பாராளுமன்றத்தில் எடுக்க வேண்டும், இராணுவத் தலைமையகத்தில் அல்ல என கூறினார்.  

மேலும் அவர் கூறும் போது நான் இந்த சந்திப்பைப் பற்றி கேள்விப்பட்டேன். கில்கிட்-பால்டிஸ்தானைப் பற்றி விவாதிக்க இது கூட்டப்பட்டது, இது ஒரு அரசியல் பிரச்சினை ... இந்த முடிவுகள் பாராளுமன்றத்தில் எடுக்கப்பட வேண்டும், ராணுவ தலைமையகத்தில் அல்ல என கூறினார்.

சந்திப்பு குறித்து தனது தந்தைக்குத் தெரியுமா என்பது குறித்து தனக்குத் தெரியாது என்று மரியம் கூறினார்.

"அவர் பின்னர் அறிந்தாரா  இல்ல்லையா என்பது எனக்குத் தெரியாது ... ஆனால் இதற்கு அரசியல் தலைவர்கள் அழைக்கப்படக்கூடாது, இதுபோன்ற பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க செல்லக்கூடாது. இந்த விஷயங்களை விவாதிக்க விரும்பும் எவரும் பாராளுமன்றத்திற்கு வர வேண்டும என கூறினார்.



Next Story