உலக செய்திகள்

அமெரிக்காவை உலுக்கிய மற்றொரு சம்பவம்! ஈவு இரக்கமின்றி போலீஸ் அதிகாரி செய்த கொடூர செயல் + "||" + Video of Seattle officer appearing to roll over protester's head with bike prompts probe

அமெரிக்காவை உலுக்கிய மற்றொரு சம்பவம்! ஈவு இரக்கமின்றி போலீஸ் அதிகாரி செய்த கொடூர செயல்

அமெரிக்காவை உலுக்கிய மற்றொரு சம்பவம்! ஈவு இரக்கமின்றி போலீஸ் அதிகாரி செய்த கொடூர செயல்
அமெரிக்காவை உலுக்கிய மற்றொரு சம்பவம்! ஈவு இரக்கமின்றி போலீஸ் அதிகாரி செய்த கொடூர செயலால் மக்கள் கொந்தளித்து உள்ளனர்.
சியாட்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் புதன்கிழமை நடந்த போராட்டங்களின் போது இந்த சம்பவம் நடந்தது. பிரொனா டெய்லர் என்ற கறுப்பினப் பெண்ணின் கொலையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகள் மீத வழக்குத் தொடராமல் விடுவிக்க கென்டக்கி அட்டர்னி ஜெனரல் முடிவெடுத்த பின்னர் சியாட்டிலிலும், மற்ற அமெரிக்க நகரங்களிலும் புதிய போராட்டங்கள் வெடித்தன.

போராட்டத்தின் போது சாலையில் விழுந்த கிடந்த நபரின் தலை மீது போலீஸ் அதிகாரி ஒருவர் தனது சைக்கிளை ஏற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக ஊடகங்களை உலுக்கியுள்ளது.

சியாட்டிலில் போராட்டத்தின் போது சாலையில் கிடந்த நபரின் தலையில் வாகனத்தை ஏற்றிய போலீஸ் அதிகாரி நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சியாட் காவல் துறை வியாழக்கிழமை அறிவித்தது.

போலீஸ் பொறுப்பு அலுவலகம் இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கி உள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரி நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கிங் கவுண்டி ஷெரிப் அலுவலகத்திற்கு குற்றவியல் விசாரணைக்கு அனுப்பியுள்ளது என சியாட் போலீசார் தெரிவித்தனர்.பாதிக்கப்பட்ட நபர் காயமடையவில்லை என்றும் அவர் கைது செய்யப்பட்டார் என்றும் எஸ்பிடி போலீஸ் அதிகாரி கூறினார். நகரத்தில் ஆர்ப்பாட்டங்களின் போது 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சிறப்புத் தொழில்களுக்கு எச் -1 பி தற்காலிக வணிக விசாக்கள் வழங்க அமெரிக்கா தடை ; இந்தியர்கள் பாதிப்பு
சிறப்புத் தொழில்களுக்கு தற்காலிக வணிக விசாக்களை வழங்க வேண்டாம் என்று வெளியுறவுத்துறை முன்மொழிந்துள்ளது இது நூற்றுக்கணக்கான இந்தியர்களை பாதிக்கலாம் என கூறப்படுகிறது
2. மெலனியா டிரம்புக்கு ’தொடர் இருமல்’ பிரசாரத்தை ரத்து செய்தார்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் “தொடர் இருமல்” காரணமாக அதிபர் தேர்தலுக்கான தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார்.
3. சைபர் தாக்குதலில் ஈடுபட்டதாக 6 ரஷ்ய உளவு அதிகாரிகள் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு பதிவு
சைபர் தாக்குதலில் ஈடுபட்டதாக 6 ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி வருவது எப்போது? - புதிய தகவல்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி பலன் அளிக்கிறதா என்பது அக்டோபர் இறுதியில் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
5. அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடனுக்கு கொரோனாவா?
ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடனுடன் விமானத்தில் ஒன்றாக பயணம் செய்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.