சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16, ஆயிரம் மசூதிகள் அதிகாரிகளால் இடிப்பு


சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16, ஆயிரம் மசூதிகள் அதிகாரிகளால் இடிப்பு
x
தினத்தந்தி 25 Sep 2020 11:27 AM GMT (Updated: 25 Sep 2020 11:27 AM GMT)

சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16, ஆயிரம் மசூதிகள் சீன அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளன

சிட்னி

ஆஸ்திரேலியாவின் தன்னார்வ  ( ASPI) புள்ளியியல் நிறுவனம் வெளியிடடுள்ள அறிக்கையில்கூறி இருப்பதாவது:-

சீனாவின் வடக்கு மேற்கு பகுதிகளில் 16,000 மசூதிகள் சீன அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று வருடங்களாக இந்த அழிப்பு நடவடிக்கைகளில் சீனா ஈடுப்பட்டுள்ளது.

இந்த மசூதிகளின் அழிவின் பெரும்பகுதி கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக நகர்ப்புற மையங்களான உரும்கி மற்றும் காஷ்கருக்கு வெளியே கிட்டத்தட்ட 8,500 மசூதிகள் அழிக்கப்பட்டுள்ளன

சீனாவின் வடமேற்கில் உள்ளது நிங்ஜியா மண்டலம். இது தன்னாட்சி அதிகாரம் பெற்றதாகும். இங்குள்ள டாங்ஜிங் கவுன்டியின் வெய்ஸு பகுதியில் ஹூய் இன முஸ்லிம்கள் அதிகமானோர் வாழ்கின்றனர். சீனாவின் ஜிங் ஜியாங் பகுதியில் உய்குர் இன முஸ்லிம்களுக்கு அடுத்த படியாக வெய்ஸு பகுதியில் ஹூய் இன முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

இந்த பகுதியில் 10 லட்சத்துக்கும் அதிகமான உய்குர்கள் மற்றும் பிற முஸ்லீம் சிறுபான்மையினர் முகாம்களில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சிறுபான்மை குழுக்கள் தங்கள் மத நடைமுறைகளையும் மரபுகளையும் கைவிட நிர்பந்திக்கப்படுகின்றனர் சீன அதிகாரிகள்.

இந்நிலையில், வெய்ஸு பகுதியில் ஏற்கெனவே இருந்த மசூதியை இடித்து விட்டு புதிதாக மசூதி கட்டப்பட்டுள்ளது. ஆனால், அனுமதி இல்லாமலும், விதிகளை மீறியும் கட்டப்பட்டதாக உள்ளூர் அரசு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதில், மீறினால், மசூதியை அரசே அப்புறப்படுத்தும் என்று சமீபத்தில் எச்சரிக்கப்பட்டது. பின்னர் அது இடிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 15,500 மசூதிகள் இடிப்பிலிருந்து தப்பியுள்ளன. இருப்பினும், இந்த மத தளங்கள் அவற்றின் குவிமாடங்களையும் மினாரையும் அகற்றின.

மசூதிகள், கல்லறைகள் மற்றும் புனித யாத்திரை வழிகள் போன்ற இஸ்லாமிய மத தளங்களில் மூன்றில் ஒரு பகுதி முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் அல்லது இப்பகுதியில் உள்ள புத்த கோவில்கள் எதுவும் அழிக்கப்படவில்லை என கூறப்பட்டு உள்ளது.

எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகளை சீன அரசாங்கம் மறுத்துவிட்டது. சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த அறிக்கையை "சீன எதிர்ப்பு அறிக்கை" என்று கூறியுள்ளது, அதில் நம்பகத்தன்மை இல்லை என கூறி உள்ளது.


Next Story